தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் சேலத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 11 டிகிரி பதிவாகியுள்ளது. சேலத்தை தொடர்ந்து, கரூர் பரமத்தி பகுதியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 

மேலும் ஏப்ரல் 2ம் தேதியன்று தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து வீசும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகும்.