குறள் : 272
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.

மு.வ உரை :
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

கலைஞர் உரை :
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை :
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?.

Kural 272
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin

Explanation :
What avails an appearance (of sanctity) high as heaven if his mind suffers (the indulgence) of conscious sin


இன்றைய பஞ்சாங்கம்
03-02-2021, தை 21, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 02.12 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் இரவு 09.07 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 03.02.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கடன்கள் குறையும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

கடகம்
இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

கன்னி
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள். 

தனுசு
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் குறையும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். உங்கள் ராசிக்கு காலை 09.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மீனம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை 09.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001