ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு சிறுவர்கள் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பழனி பேட்டை கிரிபில்ச் பேட்டை வழியாக அரக்கோணம் நகர காவல் நிலையம்வரை இரண்டு சிறுவர்கள் மட்டும் இருபது கி.மீத்தூரம் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஏந்தி சைக்கிளில் சென்றனர்.
சாலை விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு எனவும் சாலை விபத்து ஏற்படாமல் தவிர்க்கச் சாலை விதிகள் கடைபிடித்தல் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாய தலைகவசம் அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அரிவுரத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மயில் வாகனம் இரண்டு சிறுவர்கலுக்கு பரிசுகளை வழங்கிச் சாலை விதிகள் கடைபிடிக்க ஆலோசனைகள் வழங்கினார். மேலும் அருகிலிருந்த மாணவர்களுடன் சிறிது நேரம் கிரிகெட் விளையாடினார்.