ராணிப்பேட்டை மாவட்டத்தில் மினி கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் செவியிலர், மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில். ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் மினி கிளினிக் மற்றும் நல்வாழ்வு மையங்களில் உள்ள கீழ்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 13.02.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
செவிலியர்-17 பணியிடங்கள் வயது: 35 வயதுக்குள் கல்வி தகுதி: இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரியில் பெறப்பட்ட பட்டயர் சான்றிதழ். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்த சான்று ஊதியம்: 14000 ரூபாய் பல்நோக்கு சுகாதார பணியாளர்: 17பணியிடங்கள் வயது: 40 வயதுக்குள் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் ஊதியம்: 9000 ரூபாய் நிபந்தனைகள் இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் விண்ணப்பங்களை அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணிப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாள் ஆகும்.