வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த புனிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்து உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட எஸ்பி புனிதாவை ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இதே போன்று குடியாத்தம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த லட்சுமி ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த பிரபாவதி ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த யுவராணி ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் இடமாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார்.