இன்று பார்க்க இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த ஒரு அருமையான அரிசி வகையான ஆற்காடு கிச்சலி சம்பா. இந்த நெல் வகையானது ஆரணி, திண்டிவனம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இது நூற்றி பன்னிரண்டில் இருந்து நூற்றி பதினைந்து நாட்கள் வயதுடைய ஒரு நெல் இரகம். இதன் பிறகு ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமிக்கு அரிசி ஒரு இருட்டு அறையில் வைக்கப்பட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. 

ஆற்காடு கிச்சலி சம்பா அரிசியில் வைட்டமின் A சத்து அதிக அளவில் உள்ளது. பழங்காலத்தில் குழந்தை பிறந்த பிறகு அதற்கு கொடுக்கும் முதல் உணவாக இந்த ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி தான். இந்த அரிசியில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. 

 
ஒரு அரிசியில் இத்தனை சத்துக்கள் இருக்குமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் இது தான் உண்மை. இந்த சத்துக்கள் அனைத்தும் கிடைக்க நீங்கள் பட்டை தீட்டப்படாத அரிசியை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பட்டை தீட்டிய அரிசியில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டும் தான் இருக்கும். 

வளரும் குழந்தைகளுக்கு இந்த அரிசியை கொடுத்து வர அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது போன்ற பாரம்பரிய அரிசியை கொடுத்து நமது குழந்தைகளின் சத்துக்களை இயற்கையான முறையில் அதிகரிப்பதை விட்டு விட்டு மருத்துவரிடம் சென்று சத்து குறைபாடிற்கு மருந்து வாங்கி தருகிறோம். இனியும் இந்த தவறை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். 


 
பல விவசாயிகள் இந்த ஆற்காடு கிச்சலி சம்பா அரிசியை விளைவிக்கிறார்கள். இதனை வாங்கி உண்பது மட்டுமே நமது வேலை. இது நமக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும். இந்த அரிசியை வறுத்து அதனை ஊற வைத்து நிழலில் உலர விட வேண்டும். பிறகு அதனை பொட்டுக்கடலையோடு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கஞ்சி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு எந்த ஒரு தடுப்பூசியுமே தேவைப்படாது. பெரியவர்கள் இதனை உப்புமா, கஞ்சி, இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் ஆகியவை செய்து சாப்பிடலாம்.