ராணிபேட்டை: வாலாஜா அருகே பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்ட இலங்கை வாலிபர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் நல்லப்பன். இவரது மகன் மதிவாணன் (23), பெயிண்டர். 

இவர் கடந்த 27ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்திற்கு வைத்திருந்த பெட்ரோலை எடுத்துத் தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.