காவேரிப்பாக்கம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறி முதல் செய்தனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் சப்இன்ஸ்பெக்டர் தீபன் சக்ரவர்த்தி மற்றும் போலீசார் நேற்று பொய்கை நல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கசச்கால்வாய் பகுதியில் இருந்து வந்த ஒரு மாட்டு வண்டியை மடக்கி சோதனை செய்தனர். அதில் , மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து , மாட்டுவண்டியை போலீசார் மணலுடன் பறிமுதல் செய்தனர் . மேலும் , வழக்குப்பதிந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( 34 ) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .