பொது மக்கள் தங்களது பிரச்னைகளை வாட்ஸ் அப் , செல்போன் மூலம் தகவல் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் தெரிவித்தார்.
அரக்கோணத்தில் உள்ள டிஎஸ்பி அலு வலகத்திற்கு ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் நேற்று முன்தினம் திடீரென வந்து ஆய்வு செய்தார். அவரை டிஎஸ்பி மனோகரன் வரவேற்றார்.
இதையடுத்து எஸ்பி , அரக்கோணம் சப் . டிவிஷனில் உள்ள காவல் நிலையங்கள் குறித்தும் , நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார் . மேலும் , வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக் கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார் .
பின்னர் , அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள், தங்களது பிரச்னைகளை தெரிவிக்க எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். மேலும் 9842126150 என்ற செல்போன் எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம் . அதே போல் வாட்ஸ் அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம் . பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் ரோந்து அதிகரிக்கப்படும் . ரவுடியிசம் , கட்டப்பஞ்சாயத்து போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கப்படும் . கள்ளச்சாராயம் , மணல் கடத்தல் போன்றவை தடுக்கப்படும் . போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் , விபத்துக்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.