ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). என்ஜினீயர். இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அதே பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் பிரகாஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை தேடியபோது சாத்தூர் அடுத்த விலாரி கிராமத்தில் ஏரிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.