வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம்  24ஆவது வார்டு மக்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மக்கும் குப்பை மக்காத குப்பையைப் பிரித்தி கொடுத்தால் குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 45 நாட்களாக 24வது வார்டு மக்களைத் தொடர்ந்து கண்காணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களுள் இரண்டு பேருக்குத் தங்கமும், 4 பேருக்கு வெள்ளியும் மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையர் அவர்கள், மாநகர நல அலுவலர், மண்டலம் 2 சுகாதார அலுவலர் அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.