அரக்கோணம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக சித்தூர் கிராமத்தில் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் மீனா என்பவரின் குடும்பத்திற்கு எலக்ட்ரிக் தையல் இயந்திரதம் இலவசமாக இன்று வழங்கப்பட்டது.
அரக்கோணம் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக சிறிது நாட்களுக்கு முன்பு சித்தூர் சேந்தமங்கலம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் மீனா என்பவர் அவரது குடும்ப வறுமை காரணமாக மிகவும் கஷ்டப்படுவது தெரியவந்தது, இதனை அடுத்து அறக்கட்டளை சார்பாக அவருக்கு இன்று இலவச தையல் இயந்திரம் கொடுக்கப்பட்டது. இது அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னாள் சத்தியபாமா பல்கலைகழக மாணவர் ஹெர்பர்ட் ராஜ் என்பர் நிதியுதவியுடன் சுகந்தி என்பவர் வழங்கினார்.