ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூரில் அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. மணலால் சிவலிங்கம் செய்து பார்வதி வணங்கியதும், போரில் வெற்றி பெற சிவலிங்கத்தை, திருமால் வணங்கிய வரலாற்று சிறப்பு கொண்ட இந்த கோயில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இக்கோயிலில் மாசிமக பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து, சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.