நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்த தகவலை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்." எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் நலம்பெற வேண்டுவதாக சூர்யாவின் ரசிகர்களும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.