பைக் மீது ஆட்டோ மோதி 3 பேர் படுகாயம் 
ராணிப்பேட்டை , பிப் .11 : காட்பாடி கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த் ( 20 ) , தீனா ( 19 ) , பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ( 21 ) . நண்பர்களான இவர்கள் மூவரும் திருவண்ணாமலையில் நேற்று நடைற்ற ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க முடிவு செய்தனர் . இதற்காக வாலாஜாவில் கோவிட் 19 பரிசோதனை சான்று பெற நேற்று ஒரே பைக்கில் வாலாஜா சென்றுவிட்டு திரும்பினர் . சிப்காட் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ இவர்களது பைக் மீது மோதியது . 

இதில் மூவரும் படுகாயமடைந்தனர் . அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் அங்கிருந்து வேலூர் அடுக்கம் பாறை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . 

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .