வியாபாரியின் பைக் திருட்டு ; 
ஆற்காடு அடுத்த மேல்வி ஷாரத்தை சேர்ந்தவர் சையத் ஏசானுல்லா ( 52 ) , வியாபாரி. இவர் தனது பைக்கை கடந்த நவம்பர் 8 ம் தேதி வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது பைக்கை காணவில்லை . அதிர்ச்சியடைந்த அவர் , பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை தேடி வருகின்றனர்.