வழக்கமாக, பயிர்கள் விளையும் இடத்தில் விலை இல்லாவிட்டாலும், அதுபோன்ற பயிர்கள் விளையாத, அல்லது, சரிவர கிடைக்காத தொலைதூரங்களில், அதன் விலை பலமடங்காக இருக்கும். இதுபோன்ற விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் கடந்த பட்ஜெட்டின்போது ‘கிசான்’ ரெயில்சேவை அதாவது விவசாயிகள் ரெயில்சேவை மற்றும் விவசாயிகள் விமான சேவைத்திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்து, அதை தொடங்கவும் செய்தது.

 
கடந்த ஆகஸ்டு மாதம் மராட்டிய மாநிலதிலிருந்து பீகார் மாநிலம், வரை செல்லும் விவசாயிகள் ரெயிலை மத்திய அரசாங்கம் தொடங்கியது. 

இந்த ரெயில் 1,519 கிலோ மீட்டர் தூரத்தை, 31 மணி 45 நிமிடங்களில் கடந்து, வழியில் நிறைய ரெயில் நிலையங்களில் நின்று விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றிச்செல்கிறது. இதில் பழங்கள், காய்கறிகளுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையும் அளிக்கப்படுகிறது. 

குறைந்தபட்சம் இவ்வளவு சரக்குதான் அனுப்பமுடியும் என்று எந்தவித நிபந்தனையும் கிடையாது.
இந்த திட்டத்திற்கான வரவேற்பை கண்டு பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன்பு 100-வது ரெயிலையும் தொடங்கி வைத்தார்.

தற்போது 9 வழித்தடங்களில், 9 விவசாயிகள் ரெயில் ஆந்திரா, மராட்டியம், பீகார், நாக்பூர் போன்ற மாநிலங்களை இணைத்துக்கொண்டு ஓடுகிறது. இதுபோல வடகிழக்கு மாநிலங்களுக்கு கொல்கத்தா - மிசோரம் மாநிலங்களின் இடையில் விமானம் மூலமாகவும் விளைபொருட்கள் கைமாற படுகின்றன.

இதே போல், தமிழக விவசாயிகளுக்கும் பலனளிக்கும் வகையில், கேரளாவில் இருந்து தமிழ்நாடு வழியாக எவ்வளவு தூரத்துக்கு விவசாயிகள் ரெயில் விடமுடியும்? என்பதை மத்திய அரசாங்கம் பரிசீலித்து, விவசாய ரெயிலை விடவேண்டும். அவர்களுக்கு உள்ளூரில் விலை கிடைக்கவில்லை என்ற கவலை இல்லாமல் பொருட்களுக்கு ஏற்றவிலை எந்த ஊரில் கிடைக்கிறது, எந்த வியாபாரியோடு தொடர்புகொள்ளலாம் என்பதை தெரிவிக்கும் வகையில், அனைத்து உதவிகளையும் வேளாண்துறை செய்ய வேண்டும். பிரதமர் கொண்டு வந்த வேளாண் சட்டங்களிலேயே, எந்த ஊரிலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க வகைசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதனை பயன்படுத்தியும் கொள்ளலாம்.


இதை பற்றிய உங்கள் கருத்துகளை என்னென்ன?
கமென்ட் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை பகிருங்கள்!