ஆதிசங்கரர் மடத்தில் வேதபாராயணம்

இந்து மதத்திற்கு புத்துயிர் அளித்துவரும் சைவம் , வைணவம் , சாக்தம் , கௌமாரம் , கானபக்தியம் , சௌரம் உள்ளிட்ட 6 சமயங்களை உண்டாக்கியவருமான ஆதிசங்கரருக்கு இந்தியா முழுவதும் மடங்கள் கட்டப்பட்டுள்ளது. 

அதன்படி காஞ்சி மகா பெரியவரால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆகிசங்கரர் மடம் தொடங்கப்பட்டது . ஆதிசங்கரருக்கு பாதபூஜையும் , வேதபாராயணமும் நடைபெற்று வருகிறது . இதற்கிடையே சென்னையை சேர்ந்த பிரபல சமூக சேவகர் பிரம்மஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் தலைமையில் வேதபாராயணமும் ஆதிசங்கரருக்கு ஆராதனையும் நேற்று நடந்தது . தொடர்ந்து சங்கரமடபக்தர்களால் பகவத் கீதை , தோடகாஷ்டக பாராயணம் செய்தனர் . இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.