வேலூர் : தில்லியைச் சேர்ந்த இளைஞரின் இருதயத்தில் அறுவை சிகிச்சையே இல்லாமல் ' டிரைகஸ்பிட் ' வால்வை ( பதஐஇமநடஐஈ ) பொருத்தி வேலூர் சிஎம்சி மருத்துவக் குழு சாதனை படைத்துள்ளது . 
தில்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் , இருதயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அவரது ஐந்தாவது வயதில் இருதயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு இருதயத்தில் பிரச்னைகள் தொடர்ந்துள்ளன . 

நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அதிக அளவு ரத்த அழுத்தம் நீடித்ததால் டிரைகஸ்பிட் வால்வு பழுதடைந்து , அதில் ரத்தம் கசியத் தொடங்கியது . இதனால் , அவருக்கு சோர்வு , கால் வீக்கம் , படபடப்பு போன்றவை ஏற்பட்டன . இதுதொடர்பாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது இருதயத்தில் செயற்கை வால்வு பொருத்தப்பட்டது . இந்த வால்வு பழுதடைந்ததால் வேறொரு மருத்துவமனையில் , சுருங்கிய வால்வை விரிவுபடுத்தும் ' வால்வுலோ பிளாஸ்ட்டி ' ( யஅகயமகஞடகஅநபவ ) என்ற சிகிச்சையை செய்து கொண்டார் . எனினும் இந்த சிகிச்சைகள் போதுமான பலனை அளிக்கவில்லை .

இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அந்த இளைஞருக்கு மருத்துவர் ஜான் ஜோஸ் தலைமையிலான இருதய நோய் நிபுணர் குழு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டன . அதில் , அவருக்கு பொருத்தப்பட்ட வால்வு சரிபார்க்க முடியாத அளவு பழுதடைந்திருப்பதைக் கண்டறிந்தனர் . தொடர்ந்து அதை விட்டு வைத்தால் அவரது இருதயத்தின் வலது புறம் பாதிப்படையும் என்பதை உறுதிசெய்தனர் . 

இதையடுத்து , சிஎம்சி மருத்துவக் குழு அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் இடுப்பு பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ( இஅபஏஉபஉத ) டிரைகஸ்பிட் வால்வைப் பொருத்தினர் . இதன்மூலம் , ஒரு வார காலத்தில் அவர் உடல்நலம் சீரடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . 

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியது : 
சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக அறுவை சிகிச்சையின்றி இருதயத்தில் வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன . இந்த சிகிச்சை முறையால் நோயாளிகளின் உயிருக்கான ஆபத்தும் , அவர்கள் சிகிச்சை பெறும் காலமும் வெகுவாகக் குறைகின்றன . ஏற்கெனவே பலருக்கு அயோர்டிக் பல்மனரி வால்வுகள்

( அஞதபஐஇ டமகஙஞ்ச அதவ ) ரத்த நாளம் வழியாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் .