ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் உள்ள குமரகிரி மலை, அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு ரூ.3 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய மலைப்பாதை அமைக்க அடிக்கல் நாட்டு விழா காலை 8 மணியளவில் நடைபெற்றது. 
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், ஆற்காடு தாசில்தார் காமாட்சி, மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவுச் செயலாளர் ஆற்காடு சாரதி, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர் அப்துல்லா, திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரைப்பாக்கம் கிருஷ்ணன், திமிரி பேரூர் அதிமுக செயலாளர் பாஸ்கர், ஒப்பந்ததாரர் விஜயகுமார், கோயில் செயல் அலுவலர் ஏகவல்லி, திமிரி செங்குந்தர் சமுதாய தலைவர் சண்முகம், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சம்பந்தன், அறங்காவலர்கள் சேகர், நந்தகோபால், திமிரி பேரூர் கழக அவைத்தலைவர் நாராயணமூர்த்தி, துணைச்செயலாளர் கந்தசாமி, 15-வார்டு வட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.