வாட்ஸ்அப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றங்களை சேர்த்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என  வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. 
மேலும், இந்த மாற்றங்கள் பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வரும் என்றும்  வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு  அவ்வப்போது பல்வேறு பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் என்றும், பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதன்படி வாட்ஸ்அப் இன் Terms and Privacy Policy Updatesஐ கட்டாயம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாட்ஸ்அப் பயனர்கள் அனைவருக்கும் நோட்டிபிகேஷன் மூலம் இந்த தகவல் அனுப்பப்படுகிறது. இந்த நோட்டிபிகேஷனுக்கு சென்று allow என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். 

 இந்த அறிவிப்பு பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.