ஆம்பூர் தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநித் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் தனது காரில் நண்பர்கள் சதீஷ் மற்றும் சுதாகருடன் அரூருக்கு கார் உதிரி பாகங்கள் வாங்கி திரும்பியுள்ளார். 
திரும்பும்போது காரைச் சுதாகர் ஓட்டியுள்ளார். அவர் காரைச் சரிவர ஓட்டாமல் மிட்டூர் பஸ் நிலையம் அருகே பூபதி என்பவர் வந்த பைக்கில் மோதியது. இந்த விபத்தில் பூபதியுடன் வந்த தனுஷ் பலத்த காயம் அடைந்தார். பூபதியின் வலது கால் உடைந்தது. பின்னர் அந்த வழியாக வந்த செல்வம் என்பரின் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் செல்வம் படுகாயம் அடைந்தார். 

அப்போதும் காரை நிறுத்தாமல் சென்று மிட்டூர் காந்தி நகர் அருகே நாகராஜ் மற்றும் சுப்பிரமணி வந்த பைக்கின் மீது மோதியது. அப்போது அப்பகுதி மக்கள் காரில் இருந்த 3 பேரையும் பிடித்துத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.