வாலாஜாபேட்டையில் வரும் 31ம் தேதி ஏபிஜே அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரபலமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாலாஜாவில் மாரத்தான் போட்டி இம்மாதம் 31 - ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வாலாஜா ஸ்போர்ட்ஸ்கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த ஆண்டிற்கான மரதன் போட்டியானது இம்மாதம் 31 - ஆம் தேதி தொடங்க உள்ளது எனவே இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முன் பதிவு செய்வதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பங்கேற்க :- www.walajasportsclub.com