மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
திடீரென ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 7 குழந்தைகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம்தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.