தமிழ் ராசிப்பலன்/ திருக்குறள் - 8 ஜனவரி 2021
குறள் 248:
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
மு.வ உரை:
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.
கலைஞர் உரை:
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது
இன்றைய பஞ்சாங்கம்
08-01-2021, மார்கழி 24, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 09.40 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 08.01.2021
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் ரீதியாக வெளி வட்டார நட்பு கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மீனம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001
இமேஜ் கிரெடிட்ஸ் : ஶ்ரீரங்கம் இன்போ