காரில் மணல் கடத்தியவர் கைது
ஆற்காடு அருகே காரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு டவுன் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ரவுண்டானா அருகே நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது , அவ்வழி யாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையில் மூட்டைகளில் மணல் கட்டி நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது . கார் மற்றும் 10 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த அருங்குன்றம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த வன்னிய தாஸ் ( 26 ) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.