ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் அமைந்துள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசுக்களின் தொல்லை அதிக அளவில் காணப்படுவதால் நகராட்சி ஊழியர்கள் மூலமாக இன்று கொசுமருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது குறிப்பாக அனைத்து அலுவலகங்களிலும் கதவுகள் பூட்டப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் ராணிப்பேட்டை நகராட்சியின் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அலுவலக அறைகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.