ராணிப்பேட்டை காரையை பகுதியில் உள்ள மைதானத்தை காவல்துறையினர் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது இந்த மைதானத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடந்த 20 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர், இந்த நிலையில் தற்போது அம்மனிதனை காவல்துறையினர் தங்களது பயன்பாட்டிற்கு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை கண்டித்தும் மைதானத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்க கோரியும் காரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பேரணியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் காவல் துறையினரின் பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.