ராணிப்பேட்டை பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜே அமர்நாத் தலைமையில்  தர்ணா போராட்டம் நடைபெற்றது இதில்  ஆர் சிவராஜ், ஜே.குமார், கிருபாகரன் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்  மணிவண்ணன், எம்.குமரன், பிரபாகரன், பிரேம்குமார்  ஆகியோர் வரவேற்றனர்.
 இதில் சிறப்பு அழைப்பாளராக  மாநில செயலாளர்  பிரசன்னா  கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில்  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை சோளிங்கர் நிமிலி காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் காவேரிப்பாக்கம் வட்டார செயலாளர் மனோ குமார் நன்றி கூறினார்.