ராணிப்பேட்டை; காவேரிப்பாக்கத்தில் 200 குடும்பங்களை அப்புறப்படுத்த கூடாது என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த மக்கள்.
காவேரிப்பாக்கம் சந்தைமேடு வாழ் மக்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் புஷ்பராஜ் நேரில் சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறியிருப்பதாவது காவிரி பக்கம் சந்தைமேடு அண்ணாநகர் கோட்டபாய வரதராஜ பெருமாள் கோயிலை ஒட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகிறோம்.

நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் கடந்த 6 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறையினர் அனுப்பியுள்ள கடிதத்தில் சுமார் 200 வீடுகளுக்கும் காலிமனை உள்ளவர்களும் இந்த கடிதம் கிடைத்த 15 நாட்களுக்கும் அனைத்து உடமைகளையும் காலி செய்து கொண்டு செல்ல வேண்டும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் நாங்கள் பாரம்பரியமாக வசித்து வருகிறோம் மேலும் இந்த இடத்தில்தான் குடும்ப அட்டை ஆதார் அட்டை கேஸ் இணைப்பு மின்சாரம் என அனைத்தும் உள்ளன எனவே இந்த அரசு உத்தரவை ரத்து செய்து எங்களுக்கு அந்த இடத்திலேயே தங்க உதவிட வேண்டும் என்று கூறியது.