வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் கையிலிருந்த துப்பாக்கி சுட்டதால் (மிஸ் ஃபயர் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. 
வேலூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகதீஸ் என்பவர் நேற்று இரவு கை துப்பாக்கியை சுத்தம் செய்த போது தவறுதலாக கைப்பட்டு குண்டு வெளியேறியது அதிர்ஷ்டவசமாக கூரை மீது பட்டதால் ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த சக காவலர்களுக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பினர்.

உதவி ஆய்வாளர் கையாண்ட துப்பாக்கி 9mm பிஸ்டல் என்பது குறிப்பிடத்தக்கது இதில் இருந்து வெளியேறிய தோட்டா காவல் நிலையத்தில் மேற்கூரை தாக்கியதில் ஒரு அடி அளவுக்கு மேற்கூரை பேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.