வேலூர் , திருப்பத் தூர் மாவட்டத் தில் கடந்த ஆண்டில் சாராயம் வழக்கில் 1,205 பெண்கள் உட்பட 6,423 பேர் கைது செய்யப்பட்டுள்ளன ளனர் . 82,688 லிட்டர் சாராயம் பறிமு தல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் எஸ்பி செல்வகுமார் , திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் கலால் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீ சார் மலைப்பகுதிகளிலும் , வனப்பகுதிகளிலும் சாராய விற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த ஆண்டு 1 ஜனவரி மாதம் 1 ம் தேதி 4 முதல் டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரையில் வேலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட - 3,288 பேர் மீது வழக்கு - பதிந்து , அதில் 581 பெண்கள் உட்பட 3,167 பேர் கைது செய்யப்பட்டனர் . 45,246 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

28 பேர் குண்டர் சட்டத்தில் - கைது செய்யப்பட்டனர் . 4 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது . அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் விற்ப னையில் ஈடுபட்ட 2,531 பேர் மீது வழக்கு பதிந்து 424 பெண்கள் உட்பட 2,520 பேர் கைது செய்யப்பட்டனர் . 33,235 லிட்டர் சாராயம் பறிமு தல் செய்யப்பட்டது . 21 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் . 155 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 936 பேர் மீது வழக்கு பதிந்து 200 பெண்கள் உட்பட 736 பேர் கைது செய்யப்பட்டனர் . 4,207 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது . 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் , 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது . கடந்த ஆண்டில் மட்டும் 3 மாவட்டங்களிலும் சேர்த்து சாராய வழக்கில் 1,205 பெண்கள் உட்பட 6,423 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் . 82,688 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .