கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நாளை (2-ம்தேதி) மொத்தம் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒத்திகை பார்க்கப்படும். கொரோனா தடுப்பூசி போட சுமார் 47,200 மையங்கள் தயாராகி வருகின்றன. கொரோனா தடுப்பூசிக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது" என்றார்.