வேலூர்: ஆசிரியரிடம் தங்க செயினை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 
வேலூர் குடியாத்தம் மீனாட்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. அரசுப்பள்ளி ஆசிரியரான இவரது கணவர் இளங்கோ ஓய்வு பெற்ற விஏஓ.வீட்டுக்குப் பொருட்களை வாங்க டூவீலரில் வெளியில் சென்று வந்த தம்பதியர் வீட்டுக்கு முன்ன தாக டூவீலரை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.

கணவர் இளங்கோ முதலில் வீட்டுக்குள் சென்று விட, சாந்தி பைகளை டூவீலரிலிருந்து எடுத்துக் கொண்டு இருந்துள்ளார்.அப்போது எதிரே டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆசிரியை சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளனர்.
சாந்தியின் அலறல் சத்தத்தைக் கேட்ட இளங்கோ ஓடி வருவதற்குள் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துத் தப்பி ஓடியுள்ளனர். இதில் சாந்தியின் கை மற்றும் கழுத்தில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியை சாந்தி அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.