ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் பழைமையான வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் போதிய வசதி இல்லாததால் புதிய நூலக கட்டிடம் அமைக்க வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்பேரில் சோளிங்கர் கிழக்கு பஜார் பகுதியில் விநாயகர் கோயில் பின்புறத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை நிதிஉதவியின் மூலம் கனிமவள அறக்கட்டளை வழியாக 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்ட முடிவு  செய்யப்பட்டது.

அதன்படி புதிய நூலக கட்டிடத்திற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்எல்ஏ ஜி.சம்பத் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி புதிய கட்டிடத்திற்கான பணியைத் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட நூலக அலுவலர் பழனி,கண்காணிப்பாளர் சிவக்குமார், கிளை நூலகர் வேலு, சோளிங்கர் நகர செயலாளர் ராமு, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சதீஷ், நகர அவைத்தலைவர் சின்னையன், மாவட்ட பிரதிநிதி ஞானமூர்த்தி, ஒப்பானவர்கள் நரசிம்மன், முரளி, அரிதாஸ், வார்டு செயலாளர் ஆனந்த், இலக்கிய அணிச் செயலாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.