ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியில் லோடு வாகனம் விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியில் லோடு வாகனம் சோளிங்கர் டு வாலாஜா நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று வாலாஜாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது எதிரில் சிமெண்ட் ஆலை ராட்சத வாகனம் வந்து கொண்டிருந்தது.

கொடைக்கானல் அடுத்த ஆபத்தான வளைவு பகுதியில் லோடு வாகனம் மிக வேகத்தில் சென்றதால் ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்து லோடு வாகனம் ரோட்டில் கீழே இறங்கி தலைகீழாக தடம் புரண்டது.
அதையடுத்து அந்த ஊர் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது, இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த சோளிங்கர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்