ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம், பலமனேரி, புத்தூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், உள்ளிட்ட ஏரியாக்களிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற 17 அரசுப் பேருந்துகள் மற்றும் 7 தனியார் பேருந்துகள் ஆந்திர போக்குவரத்து துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.


பேருந்துகளை மீட்க வேலூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆந்திர மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் அரசுப் பேருந்துகள் 17-ம் விடுவிக்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதியுள்ள 7 தனியார் பேருந்துகளையும் விரைவில் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.