ராணிப்பேட்டை அடுத்த செட்டி தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(21). இவருக்குச் சொந்தமாக மூன்று மாடுகள் உள்ளன. அந்த மாடுகள் அருகில் உள்ள ஏரியில் விட்டு மேய்ப்பது வழக்கம்.


இந்நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளில் இரண்டு மட்டுமே வீட்டுக்கு வந்தன. ஒருமாடு வரவில்லை குமார் அவரது தம்பி பாபு (16) என்பவரும் சேர்ந்து மாடு தேடிச் சென்றனர் அப்போது ஏரி அருகே சென்றபோது மின்சாரம் தாக்கிக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் பிணத்தைப் பார்த்துக் கதறி அழுதனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று குமாரின் பிரேதத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.