திருப்பத்தூர்: ஏலகிரியில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை ராயனேரி பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து காணாமல் போனார்.அவரது பெற்றோர்கள் மாணவியை எங்குத் தேடியும் கிடைக்கவில்லையென நேற்று காலை ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதேப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் தனது மகளைக் கடத்தி சென்றிருக்கலாமெனப் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியைத் தேடி வருகின்றனர்