ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை விரைவில் பயணிகள் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை - மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் பேட்டி.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ரயில் நிலையம் மிகவும் பழமையானதாகும் இந்த ரயில் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முகமது ஜான் ரயில் நிலையத்தை இன்று ஆய்வு செய்தார், ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முரளி ராணிப்பேட்டை முன்னாள் நகர கழக செயலாளர் எம் கே மணி ராமமூர்த்தி நகர இளைஞரணி செயலாளர் மற்றும் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.