வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த அடுக்கம்பாரை யில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பெண்களுக்கான ஒருங்கிணைந்து சேவை மையம் புதிதாகக் கட்டப்பட்டது. 

புதிதாகக் கட்டப்பட்ட சேவை மையத்தினை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ரிப்பன் வெட்டித் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது வேலூர் சமூக நலத்துறை அதிகாரி மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.