ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் அருகே உள்ள  குப்பத்தா மோட்டூர் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை படு ஜோராக நடப்பதாக மாவட்ட காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ். பி உத்தரவின் பேரில் திருவலம் காவல் நிலைய  போலீஸார் குப்பத்தா மோட்டூர் கிராமத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


அப்போது பண்டிதர் தெருவில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த அள்ளிமுத்து(39) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.