ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29.01.2021 அன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29 ஆம் தேதி காலை பத்து முப்பது மணி அளவில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் காலை ஒன்பது முப்பது மணி அளவில் வருகை புரிந்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கூட்டத்தை பயன்படுத்தி கொண்ட விவசாயிகள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்