திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் மேல் பள்ள தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராம்குமார் (35) என்பவர் கடந்த 2016  ல் புத்துகோவில் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான  சந்தோஷ்,மோகன் ,சரவணன்  ஆகிய மூவருக்கும் 7 லட்சம் கடன் கொடுத்ததை திருப்பிக் கேட்டபோது பணத்தை வாங்கியவர்கள்( நண்பர்கள் )  மிரட்டியதாகக் கடிதம் எழுதி வைத்து வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.  


எல்லை பிரச்சினையால் இரு மாநில காவல்துறையினர் சடலத்தை மீட்க  வராததால் 16 மணி நேரம் காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.