ராணிப்பேட்டையில் நடுரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்.
ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை , வாலாஜா ரோடு , அம்மூர் ரோடு , பழைய புதிய பஸ் நிலையங்கள் , ரயில்வே ஸ்டேஷன் ரோடு , ராஜேஸ்வரி திரையரங்கம் சந்திப்பு , பஜார் , வண்டி மேட்டு சாலை , காந்தி சாலை , நவல்பூர் , காரைக்கூட் ரோடு போன்ற இடங்களில் உள்ள பிரதான சாலைகளில் கால்நடைகள் நின்றுகொண்டும் , திடீர் திடீரென நடுரோட்டில் ஓடுவதுமாகவும் உள்ளது.

இதனால் தினசரி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர் . மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது . எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . தெரு நாய்கள் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது . எனவே இவற்றை நகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்லவேண்டும் மேலும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவேண் டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.