அரக்கோணம்: அரக்கோணத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சசிகுமார் மீது கொலை முயற்சி - கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்


அரக்கோணத்தில் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சசிகுமார் என்பவரை மர்ம கும்பல் கொல்ல முயற்சி இதனால் அரக்கோணத்தில் பரபரப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தமுடைய சசிக்குமார் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சசிகுமாரை காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி முயற்சித்துள்ளனர், இதனால் காயம் அடைந்த சசிக்குமார் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வருவதை கண்டு வெட்ட வந்த கும்பல் தப்பி ஓடி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அறிவாளிகள் அரக்கோணம் நகர காவல் துறையினர் கைப்பற்றி தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.