மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு 
வேலூர் சத்துவாச்சரியில் மூதாட்டியிடம் 5 சவரன் செயினை மர்ம ஆசாமி பறித்து சென்றார்.

வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா ( 70 ) . இவர் நேற்று காலை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது , அவரை பின்தொடர்ந்து பைக்கில் ஹெல்மேட் அணிந்துக்கொண்டு வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென மல்லிகாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா கூச்சலிட்டார் . இருப்பினும் மர்ம ஆசாமி மாயமாகிவிட்டார் . 

இது குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .