ஆற்காட்டில் விதியை மீறி இயங்கிய இரண்டு திரையரங்குகளுக்கும் ரூபாய் 40,000 அபராதமாக விதிக்கப்பட்டது வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆரணி சாலையில் உள்ள இரண்டு திரையரங்குகளில்  கொரோனா வைரஸ் தொற்று விதிமுறைகளை மீறி அதிகப்படியான கூட்டம் கூட்டி இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட  சப்-கலெக்டர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சப்-கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் ஆற்காடு வருவாய்த்துறை அமுதவல்லி விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தேன அதிகப்படியான கூட்டம் கூட்டி இருந்த இரண்டு திரையரங்குகளுக்கு தலா 20,000 என மொத்தம் 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.