கிருத்திகையை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது . 

இக்கோயிலில் நேற்று மார்கழி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக , அலங்கார , ஆராதனை நடந்தது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தார் . 

பக்தர் கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.