நிலவில் நிலம் வாங்க முடியுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்திருக்கும் . இது குறித்து பல்வேறு கேள்விகள் , விவாதங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது . அண்மையில் உயிரிழந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நிலவில் நிலம் வாங்கியுள்ளார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது . அவர் ஆன்லைன் வலைத்தளமான தி லூனார் ரெஜிஸ்ட்ரி என்பதன் மூலம் நிலம் வாங்கியிருக்கிறார்.
இந்த லூனார் ரெஜிஸ்ட்ரி என்ற வலைத்தளம் நிலப்பரப்பை 15 தளங்களாக்கப் பிரித்து விற்பனை செய்கிறது . இதன் மூலம் மொஸ்கோவியன்ஸ் ( MOSCOVIENSE ) என்ற இருண்ட பகுதியை சுஷாந்த் சிங் வாங்கியிருக்கிறார்.

இந்த தளத்தில் சென்று பார்த்தால் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை மற்றும் எவ்வளவு ஏக்கர் வரை வாங்கலாம் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது . நீங்கள் நிலம் வாங்கியவுடன் அதற்கான பத்திரங்கள் இந்த நிறுவனத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.

ஆனால் இது சட்டப்பூர்வமானதா என்று பார்த்தால் 1967 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் , அமெரிக்கா , யு.கே ஆகிய மூன்று நாடுகள் இணைந்து கையெழுத்திட ஒப்பந்தத்தின் படி விண்வெளியில் உள்ள நிலத்தை யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதே ஆகும்.

மேலும் இந்த ஒப்பந்தத்தை அனைத்து உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும் . இருப்பினும் இது போன்ற நிறுவனங்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர் . உண்மையில் இது போன்ற நிறுவனங்களிடம் நீங்கள் நிலம் வாங்கினாலும் எந்த ஒரு பயனும் இல்லை . ஏனெனில் எந்த ஒரு தனி நபராலும் நிலவில் உள்ள நிலத்தை சொந்தமாக்க முடியாது.

மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங் - ஐ அணுகவும் 

https://lunarregistry.com/moon-land/lake-of-dreams